சவூதி ஹெல்த் கவுன்சில் (SHC) வீட்டிலேயே சுகாதாரப் பாதுகாப்பு பெறும் நோயாளிகளின் பராமரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வையும், பயிற்சி வழங்குவதற்கான வழிமுறையையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு வீட்டு சுகாதார வழங்குனர்களுக்கான குறிப்பு வழிகாட்டியின் இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டு சுகாதாரத்தின் அடிப்படைகள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட மூட்டுவலி போன்ற சில பொதுவான நோய்கள்பற்றிய அறிவியல் விளக்கங்கள், வீட்டிலேயே நோயாளிகளைக் கையாள்வதற்கு உதவும் பல தகவல்களையும் வழிகாட்டுதலையும் இந்தக் குறிப்பு உள்ளடக்கியது.
வீட்டுச் சுகாதாரப் பராமரிப்புச் சேவை மற்றும் நோயாளிகளின் உடல்நிலையைச் சமாளிக்க சிகிச்சைக் குழுவால் தீர்மானிக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பயிற்சி பெற்ற துணையின் இருப்பு தேவைப்படுவதால் நோயாளிகளைப் பராமரிக்கப் பயிற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கும் இந்த வழிகாட்டி எளிதாகத் தெளிவுப்படுத்தும் என SHC சுட்டிக்காட்டியுள்ளது.
நோயாளிக்கு மருத்துவ சேவைகளை வீட்டிலேயே வழங்கத் தேவையான பயிற்சிகள், இதயம் மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான வழக்குகளைக் கையாளும் முறைகள் குறித்தும் பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என SHC மேலும் கூறியுள்ளது.