வீட்டிற்குள் குழந்தைகளை ஆபத்தில் இருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.
அடுப்பு, கேஸ் சிலிண்டர்கள், மின்சாதனங்கள் போன்ற தீயை உண்டாக்கும் சாதனங்களைக் குழந்தைகள் அணுகும் வகையில் விட்டுச் செல்ல வேண்டாமென வீட்டு உரிமையாளர்களைச் சிவில் பாதுகாப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்யத் தகுந்த பவர் சாக்கெட் மூலம் மின் கம்பிகள் மூடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. கூர்மையான கருவிகள், துப்புரவுப் பொருட்கள், ரசாயனங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளை நீச்சல் குளங்களில் தனியாக விடக் கூடாது, மேலும் குழந்தைகளை ஒரு இடத்தில் அடைத்து வைக்காமல், பார்வையாளர்கள், மேற்பார்வையாளர் அல்லது பெரியவர்கள் முன்னிலையில் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.