மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மணல் புயல் வியாழன் முதல் சனிக்கிழமை வரை நாடு முழுவதும் எட்டு பகுதிகளைத் தாக்கும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கணித்துள்ளது.
மதீனா, ஹைல், ரியாத், அல்-காசிம் அல்-ஜூஃப், வடக்கு எல்லைகள் மற்றும் தபூக் ஆகிய பகுதிகளில் தூசி நிறைந்த காற்று வீசக்கூடும் என்று மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை ஏற்ற இறக்கங்கள் குறித்து கடந்த வாரம் NCM எச்சரித்துள்ளது.மணிக்கு 60 கிமீ வேகத்துடன், மிதமான அல்லது பலத்த இடியுடன் மற்றும் காற்றுடன் கூடிய மழை நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.