சவூதி அரேபியாவில் உள்ள உம்ராஹ் பயணிகள் மற்றும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள், தங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது நான்கு மணி நேரம் அல்லது ஆறு மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையம் வந்து அடையுமாறு கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தின் ஜித்தா நிர்வாகம்,
அறிவித்துள்ளது.
பயணிகள், அவர்கள் சேருமிடத்திற்கான செல்லுபடியாகும் பயணச் சீட்டுடன், எந்த தாமதமும் இன்றி தங்கள் பயண நடைமுறைகளை சரியான நேரத்தில் முடிக்குமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.
உம்ராஹ் பயணிகள் தொடர்ந்து தங்கள் நாடுகளுக்குத் திரும்புவதால் விமான நிலையத்தின் அதிக விமானப் போக்குவரத்து மற்றும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு , விரைவாக நடைமுறைகளை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜெத்தா விமான நிலைய நிர்வாகம் தனது ட்விட்டர் கணக்கில் பதிந்து கேட்டுக் கொண்டுள்ளது.