சுற்றுலாவுக்கான புதிய சிறப்புப் பிரிவைச் சவூதி பப்ளிக் ப்ராசிகியூஷன், பொது வழக்கறிஞரின் தலைமையில் உருவாக்கியுள்ளது.
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் சுற்றுலா வழக்குகளின் சிறப்புப் பிரிவை நிறுவுவதற்கான முடிவை அட்டர்னி ஜெனரலும், பப்ளிக் பிராசிகியூஷன் கவுன்சிலின் தலைவருமான ஷேக் சவுத் அல்-முஜாப், வெளியிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் வழக்குகளை நீதியின் கொள்கைகளுக்கு இணங்க, சுற்றுலா இலக்குகளுக்கு ஏற்பக் குறுகிய காலத்திற்குள், முடிப்பதை இந்தப் புதிய வழக்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுற்றுலா வழக்குத் தொடர்பாளர் அரசு வழக்கறிஞருடன் இணைக்கப்பட்டு, வழக்குகளைத் தீர்த்து, தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களை பயணிகள் பெற 24 மணி நேரமும் செயல்படும்.
பயிற்சி பெற்ற மற்றும் தேவையான திறன்களைக் கொண்ட உதவியாளர்கள், சட்டத் திறன் , சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் தரநிலைகளுக்கு இணங்கப் புதிய பிரிவுகளில் பப்ளிக் ப்ராசிக்யூஷனின் உறுப்பினர்கள் ,பணியாற்றுவார்கள்.