வாகன உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான விநியோகத் திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், 20 வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து சவூதி அரேபியாவிற்கு வாகனங்களை இறக்குமதி செய்யச் சவுதி தரநிலைகள், அளவியல் மற்றும் தர அமைப்பு மற்றும் சவுதி துறைமுக ஆணையம் (MAWANI) ஆகியவை தடை விதித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான டெலிவரி திட்டத்தை நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் வரை 3.5 டன்களுக்கும் குறைவான எடையுள்ள புதிய இலகுரக வாகனங்களை இறக்குமதி செய்யச் சவுதி ஆட்டோமொபைல் டீலர்களுக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன உற்பத்தியாளர்களின் பட்டியல் ஒருங்கிணைந்த மின்னணு போர்ட்டலில் வெளியிடப்படும் என்று MAWANI குறிப்பிட்டுள்ளது.
தரநிலை அளவியல் மற்றும் தர அமைப்பு அதன் ஒப்புதலுக்கு முன் விநியோகத் திட்டத்தை மதிப்பாய்வு செய்து மின்னணு அல்லது எழுத்துப்பூர்வமாக நிறுவனங்களுக்கு அவதானிப்புகளைத் தெரிவிக்கும். கடந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் 21 வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் விநியோகத் திட்டத்தைச் சமர்ப்பிக்கத் தவறியதாகத் தரநிலைகள், அளவியல் மற்றும் தர அமைப்பு அறிவித்தது.





