விண்வெளி துறைக்கான ஆயத்த வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் திறக்கப் பட்டுள்ளதாக இரண்டு புனித மசூதிகள் உதவித்தொகை திட்டத்தின் பாதுகாவலர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (ஜார்ஜியா டெக்), இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களை இந்தத் திட்டம் குறிவைக்கிறது.
9 மாத படிப்பான இது வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும். இதற்கான விண்ணப்பத்தைக் கடந்த ஜூன் 11 ஆம் தேதி முதல் வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். ஸ்காலர்ஷிப் திட்டம், விண்வெளி மேஜர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் சேருவதற்கான தேவைகளின் தொகுப்பை நிர்ணயித்துள்ளது.
திறன் சோதனை; சாதனைத் தேர்வு, TOEFL, IELTS, STEP மற்றும் தரப்படுத்தப்பட்ட சோதனைகள் (SAT) போன்ற மொழித் திறனுக்கான தேர்வு, விண்ணப்பதாரர் வெளியிட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேசப் பரிசுகளும் இதில் அடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.