சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள விதிமுறைப்படி அனைத்து வகையான விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு ஹஜ் செய்ய உரிமை இல்லை எனச் சுற்றுலா அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
சவுதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சகம், ஹஜ் அனுமதியின்றி மக்காவிற்குள் நுழையும் சவுதி குடிமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு 10000 ரியால் அபராதமலமும், மீண்டும் மீண்டும் விதிகளை மீறினால் மீறல்களுக்கு இரட்டை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.
மக்கா, மத்திய ஹரம் பகுதி, புனிதத் தலங்கள், ஹரமைன் ரயில் நிலையம், பாதுகாப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் பிற இடங்களில் ஹஜ் அனுமதி மீறல்களுக்கான அபராதங்கள் விதிக்கப்படும்.
விதிமீறல்களை தவிர்க்க அனைத்து பார்வையாளர்களும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் மற்றும் விசா தேவைகளுக்கு இணங்கவும் சுற்றுலா அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.





