உள்துறை அமைச்சகம் அனைத்து வகையான விசிட் விசா வைத்திருப்பவர்களும் மே 23 முதல் ஜூன் 21 வரை மக்காவில் நுழையவோ அல்லது தங்கவோ தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் அமைச்சகம் விசிட் விசாக்களுடன் வருகை தரும் பார்வையாளர்களை மக்காவில் ஹஜ் செய்யக் கூடாது என்றும் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஜூன் 2 முதல் 20 வரை அனுமதியின்றி மக்காவிற்குள் நுழையும் சவுதி குடிமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட ஹஜ் பயணத்தை மீறுபவர்களுக்கு சவூதி ரியால் 10,000 அபராதம் விதிக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.