பள்ளி மாணாக்கர்களின் சேர்க்கை தொடர்பாக வெளியுறவு அமைச்சகமான MOFA மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வழி காட்டுதல்களின் படி ஜூபைல் இந்தியன் பன்னாட்டுப் பள்ளியில் ஏற்கனவே உள்ள மாணவர்களுக்கு, இகாமாவைப் புதுப்பிக்காதது அல்லது ஸ்பான்சரின் சேவை நிறுத்தம் அல்லது பணியாளருக்கும் முதலாளிக்கும் இடையிலான தகராறு காரணமாக, சட்டவிரோதமாகத் தங்கியிருந்தால், குழந்தை தனது கல்வியைத் தொடரலாம் என்றும் இது சம்பந்தமாகக் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கக் கல்வியாண்டில் மாணாக்கர்களின் நிலையைச் சரிசெய்தல்.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் தங்கள் பெற்றோருடன் விசிட் விசாவில் இருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளி சேர்க்கை அரசின் விதிகளை மீறுவதாகக் கருதப்படும், ஏனெனில் விசிட் விசாவில் உள்ள எந்த வெளிநாட்டவரும் சவூதியில் படிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் விசிட் விசாவில் வருபவர்கள் சவூதியில் 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி என்றும் அறிவித்துள்ளது.