முட்டு வலி இடுப்பு வலி கழுத்து வலி ஜுரம் தலைவலி காய்ச்சல் மூக்கடைப்பு அலுப்பு உடல் அசதி ஆகியவற்றைக் குறைக்கும் அரு மருந்து இது.
கவுட் ஆர்த்திரைடிஸ் என்ற நோய் உடலில் இருக்கும் யூரிக் ஆசிட் வெளியேறாமல் உடலுக்குள் தங்கி உடலைப் பாதிக்கும்.
கால் கட்டை விரல் பக்கத்தில் அல்லது கை மணிக்கட்டுகள் அல்லது விரல்கள் பக்கத்தில் வலியும் வீக்கமும் ஏற்படும் நாள் ஆக ஆக உடல் முழுவதும் பரவி உடலை அசைக்கக் கூட முடியாதபடிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கவுட் பிரச்சினையைக் குறைக்கக்கூடிய அழகான அரு மருந்து.
காலையில் எழுந்திருக்கும்போது கைகளைக் கால்களை நீட்டச் சுருக்க முடியாது அரைமணி நேரம் சென்றபின் வெயில் வந்தபின்தான் கைகால்களை நீட்டி மடக்க முடியும்
வலியும் வேதனையும் கூடுதலாக இருக்கும் அதற்குக் கொடுக்கப் படும் ஸ்டீராய்டு மருந்துகள் நோயை அதிகப் படுத்துவதோடு உறுப்புகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும்
பின் விளைவுகளைக் கொண்டாதாக இருக்கிறது
தயாரிக்கும் முறை:
- சுக்கு தூள் ……………….. அரை தேக்கரண்டி
- சீந்தில் தண்டு……………. அரை தேக்கரண்டி
- தான்றிக்காய் ……………. அரை தேக்கரண்டி
ஆகிய மூன்று பொருட்களையும் நானூறு மில்லி தண்ணீரில் போட்டுச் சிறுதீயில் நன்கு காய்ச்சி நூறு மில்லி கசாயாமாகச் சுருக்கி இறக்கி வடிகட்டித் தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் குடித்துவர வாத நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து குணமாகும்.
சூடாகக் குடித்த அரை மணி நேரத்தில் வலிகள் படிப்படியாகக் குறைவதை உணர முடியும் பசி இன்மை செரிமானம் இன்மை, வயிற்றில் முழுமையாக வாயு நிரம்பி இருக்கும் உணர்வு போன்ற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த மருந்து இது.
அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்சினை உணவு உண்ட உடனே மலம் கழிக்கும் பிரச்சினைகள் நீங்கும். தினமும் இதை மருந்தாக அல்ல மூலிகை தேநீராகக் குடித்து வர வாதம் சம்பந்தப் பட்ட அனைத்து பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும் அருமருந்து இது.