பயனாளிகளுக்கு வாட்ஸ்அப் விண்ணப்பத்தில் சேவை செய்ய, அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை எனப் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) மறுத்துள்ளது. பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்து பயனாளிகளுக்குச் சேவைகளை வழங்கும் மோசடி இணையதளங்கள், போலி மற்றும் சந்தேகத்திற்கு இடமாகக் கணக்குகளைக் கையாள்பவர்களையும் ஜவாசத் எச்சரித்துள்ளது.
சேவைகள் , தகவல் மற்றும் செய்திகளைப் பெற விரும்புவோர் ஜவாசத் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் தகவல்கள் பெறலாம். Jawazat ன் கணக்குப் பெயர் “@AljawazatKSA” .இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ட்விட்டர், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஜவாசத் பயணாளிகள் செய்திகளைப் பெற
தனது மின்னஞ்சல் “992@gdp.gov.sa” மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளம் “www.gdp.gov.sa” கணக்குகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.