வாகன உற்பத்தி மற்றும் தன்னாட்சி வாகன தொழில்நுட்பத்தில் முதலீட்டை மேம்படுத்துவதற்காகச் சவுதி அரேபியா செவ்வாய்க்கிழமையன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டின் முதலீட்டு அமைச்சகத்திற்கும் Rigel மற்றும் Clevon ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சவூதி அரேபியாவில் எதிர்கால கண்டுபிடிப்புகளை வடிவமைப்பதில் ஒரு முக்கியமான படியாகவும், தொலைநோக்கவும் கருதப்படுகிறது என்று அமைச்சகம் கூறியுள்ளது.