அக்டோபர் 1 ஞாயிற்றுக்கிழமை முதல், சவூதி அரேபியாவின் பொதுப் போக்குவரத்துத் துறை, வாகனங்களுக்கான செல்லுபடியாகாத காப்பீடு மீறல்களைத் தானாகக் கண்காணிக்கும் தானியங்கியை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சவூதி முழுவதும் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கவர்னரேட்டுகளில் இது பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மின்னணு முறையில் வாகனத்தின் மீறல் கண்காணிக்கப்படும்.அப்ஷர் தளத்தில் உள்ள பயனரின் கணக்கு மூலம் வாகன காப்பீடு செல்லுபடியாகும் செயல்முறையைச் சரிபார்க்க முடியும்.
அரசு ஆணை மூலம் செய்யப்பட்ட திருத்தங்களில் செல்லுபடியாகும் வாகனக் காப்பீடு இல்லாதது குற்றமாகும்.இதற்கான அபராதம் குறைந்தபட்சம் 100 ரியால்கள் மற்றும் அதிகபட்சம் 150 ரியால்கள்.
வாகன ஓட்டிகள், குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர், போக்குவரத்து விதிகளுக்கு இணங்குமாறும், சாலை விபத்துகளின் போது அவர்களின் வாகனங்கள் செல்லுபடியாகும் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் எனப் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.