நாட்டின் நகரங்களில் அதிக வெப்பநிலை காரணமாக வாகனங்களில் எரியக்கூடிய பொருட்களை வைத்திருப்பதற்கு எதிராகக் குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பமான காலநிலையில் மொபைல் சார்ஜர்கள், பேட்டரிகள் மற்றும் வாசனை திரவியங்கள், கை சுத்திகரிப்பு பாட்டில்கள் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை வாகனங்களில் விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும், வாகனங்களுக்குள் விடப்பட்டால், அதிக வெப்பம் காரணமாக இந்தப் பொருட்கள் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம் இருப்பதாகச் சிவில் பாதுகாப்பு பிரிவு வாகன ஓட்டிகளுக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளது.