அக்டோபர் 1, 2023 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வாகனங்களுக்குச் செல்லுபடியாகும் காப்பீடு இல்லாத மீறலைத் தானாகவே கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டதாகச் சவுதி அரேபியாவின் போக்குவரத்து பொதுத் துறை அறிவித்துள்ளது.
வாகனம் செல்லுபடியாகும் காப்பீடு இல்லாத பட்சத்தில், சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும், விதிமீறல் குறித்த தானியங்கி கண்காணிப்பு நேரடியாக மேற்கொள்ளப்படும் என்று பொது துறை தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள், குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும், ஏதேனும் போக்குவரத்து விபத்துகள் ஏற்பட்டால் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களின் வாகனங்கள் செல்லுபடியாகும் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
போக்குவரத்துச் சட்டத்தின் திருத்தங்களில் செல்லுபடியாகும் வாகனக் காப்பீடு இல்லாதது குறைந்தபட்சம் சவூதி ரியால் 100 மற்றும் அதிகபட்சம் சவூதி ரியால் 150 அபராதம் விதிக்கப்படும் குற்றம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.