ஜிசிசி நாடுகளை இணைக்கும் ரயில்வே திட்டத்தின் இறுதி கட்ட பணிகளை செய்து வருவதாக (ஜிசிசி) பொதுச் செயலாளர் ஜாசெம் அல்-புதைவி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள
அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில்
மே 15-16 தேதிகளில் நடைபெற்ற மத்திய கிழக்கு ரயில் கண்காட்சி மற்றும் மாநாட்டில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த வளைகுடா நாடுகளின் செயல்முறைக்கு GCC நாடுகளின் தலைவர்கள் ஆதரவளிக்க ஆர்வமாக உள்ளதாக வலியுறுத்தினார். GCC மாநிலங்கள் தங்களின் கொள்கைகள் மற்றும் உத்திகளை ஒருங்கிணைக்க சிந்தனைமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ள்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே திட்டத்தை முடிக்க தலைமை செயலகம், ஜிசிசி ரயில் ஆணையம், GCC உறுப்பு நாடுகளின் முயற்சிகள் ஆகியவை முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் உறுப்பு நாடுகளுக்கு கூட்டு முதலீடுகளை ஆதரிக்கிறது , வளைகுடா பொருளாதார மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் தாக்கத்தை வலுப்படுத்துகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது எல்லைக்குள் ரயில்வே கட்டுமானத்தை முடித்து, சவூதி எல்லையுடன் இணைத்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.