இணைய தேடுபொறிகள்மூலம் விளம்பரங்களைப் பெறுவதாகவும், விளம்பரப்படுத்துவதாகவும் கூறி, அமைச்சகத்தைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் 51 போலி இணையதளங்களை வர்த்தக அமைச்சகம் முடக்கியுள்ளது.
மேலும் மோசடி முயற்சிகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதிலும், மீறும் அனைத்து இணையதளங்களையும் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுப்பதன் முயற்சிகளையும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் அல்-ஹுசைன் வலியுறுத்திக் கூறினார்.
போலி இணையதளத்தைப் பற்றிப் புகாரளிக்க 1900 என்ற அறிக்கை மையத்தின் எண் மூலமாகவோ அல்லது BALAGH செயலி மூலமாகவோ அணுகுமாறு நுகர்வோருக்கு அல்-ஹுசைன் அழைப்பு விடுத்துள்ளார்.