பாலாக் திஜாரி ஆப் அல்லது 1900 என்ற எண் மூலம் வர்த்தக அமைச்சகம், மோசடி அறிவிப்பு உள்ளிட்ட வணிகத் தகவல்தொடர்புகளை குறித்து சமர்ப்பிக்க முடியும் என சவூதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலியான இணையதளங்களை கையாள்பவர்களையும், அமைச்சகத்தைப் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சான்றுகளை மோசடியான வழிகளில் பெற்று ஏமாற்றுபவர்களையும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மோசடி செய்பவர்களுக்கு இரையாகிவிட்ட வாடிக்கையாளர்களின் பல மோசடி வழக்குகளை அமைச்சகம் கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. வங்கி கணக்கு எண், கடவுச்சொற்கள் அல்லது OTP சரிபார்ப்புக் குறியீடுகள் போன்ற ரகசியத் தகவலைப் பெற மோசடி முறைகளைப் பின்பற்றுகின்றனர்.
பொது மக்கள் இதுபோன்ற ரகசியத் தரவுகளை யாரிடமும் வழங்கக்கூடாது என அமைச்சகம் எச்சரித்துள்ளது. அமைச்சகத்தின் அடையாளத்தைப் பயன்படுத்தி ஏதேனும் போலி இணைப்புகளைக் கையாள்பவர்களையும் எச்சரித்துள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து கணக்கு எண்கள், ஏடிஎம் கார்டுகள் ,கடவுச்சொற்கள் சரிபார்ப்புக் குறியீடுகளை போன்றவற்றை ஒருபோதும் கேட்பதில்லை என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமைச்சகத்தின் தொலைபேசி எண் 1900 மற்றும் பலாக் திஜாரி பயன்பாடு (https://mc.gov.sa/C-app) ஆகியவை மூலம் மட்டுமே தகவல் தொடர்புகளைப் பெறுவதாக அமைச்சகம் கூறியுள்ளது.