சவூதி அரேபியாவின் நீர் திட்டங்களின் மதிப்பு 8 ஆண்டுகளுக்குள் சவூதி ரியால் 150 பில்லியனைத் தாண்டியுள்ளது என்றும், அதில் வடக்கு எல்லைப் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டது தோராயமாகச் சவூதி ரியால் 2 பில்லியன் என்றும் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் இன்ஜி.அப்துல்ரஹ்மான் அல்-ஃபத்லி உறுதிப்படுத்தினார்.
சவூதி அரேபியாவில் 2035 ஆம் ஆண்டில் குப்பைகளைக் குப்பைக் கிடங்குகளில் வீணாக்காமல் 95% மறுசுழற்சி செய்யச் சுற்றுச்சூழல் அமைப்பு இலக்கு வைத்துள்ளது என்றும், சுற்றுச்சூழல் அமைப்பின் துறைகளுக்கான சட்டமன்றக் கட்டமைப்பு நிறைவு செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
வடக்கு எல்லைப் பகுதியின் வளர்ச்சியில் விவசாயத் துறை முக்கியப் பங்காற்றுகிறது என்றும், நம்பிக்கைக்குரிய முதலீட்டு வாய்ப்புகள் வணிகர்கள் எதிர்பார்ப்பதை விட இப்பகுதியில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவில் விவசாயத் துறையில் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்புகளாக மாற்றுவதில் சுற்றுச்சூழல் அமைப்பின் வெற்றியை அமைச்சர் தனது உரையின் போது, எடுத்துரைத்தார்.
இந்தச் சாதனைகள் 2022 ஆம் ஆண்டில் சவூதி ரியால் 100 பில்லியன் மதிப்புள்ள விவசாய உற்பத்தியைச் சாதனை படைக்க வழிவகுத்து, கிராமப்புறங்களுக்கு தாராளமான நிதியுதவியுடன் சவூதி 8.5 பில்லியனை வழங்குகிறது எனச் சவூதியின் நிலையான விவசாய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தை (ரீஃப்) அல்-ஃபத்லி பாராட்டினார்,
முதலீட்டாளர்களுக்குச் சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப ஊக்கங்களைப் பொறுத்தவரை, திட்டங்களுக்கு நிதியளிப்பதில் ADF சிறந்த பங்களிப்பை வழங்குகிறது என்பதை அல்-ஃபாத்லி உறுதிப்படுத்தினார்.





