ரியாத் 2023 தற்காப்பு கலை விளையாட்டுப் போட்டிகள் இன்னும் 90 நாட்களில் தொடங்க உள்ளது. 2023 அக்டோபர் 20 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தற்காப்புக் கலைகளின் பல-விளையாட்டு நிகழ்வு, மத்திய கிழக்கில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
80 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஸ்போர்ட்ஸ் சிட்டி ரியாத்தில் உள்ள கிங் சவூதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த உலகப் தற்காப்பு விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.
போட்டியில் கை மல்யுத்தம், குத்துச்சண்டை, வாள்வீச்சு, ஜூடோ, கராத்தே, கெண்டோ, கிக் பாக்ஸிங் மற்றும் மல்யுத்தம் ஆகியவைகள் அடங்கும்.
சாம்பியன்ஷிப் தொடங்குவதற்கு இன்னும் 90 நாட்களே உள்ள நிலையில், ரசிகர்கள் இந்த விளையாட்டுப் போட்டிக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.