ரியாத் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் தலைநகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ‘ஸ்மார்ட் டிராவல் ஜர்னி’ பரிசோதனையைச் செயல் படுத்துவதாக அறிவித்தது.
இந்தச் சோதனையின் கீழ், பயணிகள் போர்டிங் பாஸ் இல்லாமல் அவர்களின் டிஜிட்டல் முகத்திரை அடையாளம்மூலம் பயணிக்கலாம் என்றும் SITA ஸ்மார்ட் பாத் தீர்வு திறமையான பயோமெட்ரிக் பதிவைச் செயல்படுத்துகிறது என்றும் கூறியிள்ளது.
ஏனெனில் பயணிகள் SITA FacePod இன் கேமராவைப் பார்ப்பதன் மூலம் அது அவர்களின் போர்டிங் பாஸாக மாறும் என்றும் SITA-உதவி விமான போர்டிங் குறைந்தது 20 சதவிகிதம் போர்டிங் நேரத்தைக் குறைக்கும் என்றும் மேலும் இது பாதுகாப்பை அதிகப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. இது செயல் முறையை விரைவுபடுத்துகிறது என்றும் விமான நிலையத்தில் பயணிக்கும்போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்றும் உலகளாவிய நிறுவனமான SITA உடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட் சேவை அதிகபட்ச வாடிக்கையாளர் திருப்தியை அடைய ரியாத் விமான நிலையத்தை ஸ்மார்ட் விமான நிலையமாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகக் கருதப்படுகிறது என்றும் நிறுவனம் கடந்த திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரியாத் ஏர்போர்ட்ஸ் நிறுவனம், விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் எண். 5 இல் ஸ்மார்ட் ஷாப்பிங் கார்ட்களுக்கான சோதனைச் சேவையை முன்னதாகவே அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் தனது பயணிகளுக்கு இது போன்ற புதிய சேவையை வழங்கும் சவூதியின் முதல் விமான நிலையம் என்ற பெருமையைப் பெறுகின்றது என்றும் அறிவித்துள்ளது.