Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ரியாத் மசூதிகளிலிருந்து மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவை மீரல்களை பிடித்துள்ள இஸ்லாமிய அமைச்சக அதிகாரிகள்.

ரியாத் மசூதிகளிலிருந்து மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவை மீரல்களை பிடித்துள்ள இஸ்லாமிய அமைச்சக அதிகாரிகள்.

151
0

இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தின் மேற்பார்வைக் குழுக்கள், ரியாத் பகுதுயில் உள்ள பல மசூதிகளின் மின்சாரம் மற்றும் நீர் சேவைகள் தொடர்பான பல மீறல்களைப் பிடித்துள்ளனர்.

தண்ணீர் டேங்கர்களை நிரப்பப் பெரிய பம்புகளுடன் இணைக்கப்பட்ட வணிக நீர் விநியோகத்தை இயக்க மசூதியிலிருந்து மின்சாரம் மோசடி செய்ததை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும், மசூதியை ஒட்டியுள்ள தொழிலாளர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட அறைகள் மசூதியின் மின் மீட்டர்களில் 24 மணி நேரமும் இயங்குவதும் கண்டறியப்பட்டது என அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மசூதியின் மீட்டர்களில் கம்பிகள், மின்சார கேபிள்கள் மற்றும் தண்ணீர் குழாய்களை இழுத்து, மரங்களால் சூழப்பட்ட தனியார் சொத்துடன் இணைப்பதன் மூலம் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் முறைகேடு செய்யப்பட்டதும், மக்கள் தொழுகை நடத்தும் இடத்திற்கு வரக் கூடாது என்பதற்காக மக்களை ஏமாற்ற மசூதிக்குச் சிறப்பு நுழைவாயில் இருப்பதாக அங்கு எழுதப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மின்சாரம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள வில்லாக்களில் பல வசதிகளை ஒளிரச் செய்யவும், வில்லாக்களுக்கு இடையில் அமைந்துள்ள முழு பண்ணைக்கும் நீர்ப்பாசனம் செய்வதற்காக மசூதியின் நீர் மீட்டரில் பம்ப் ஒன்றை நிறுவி அதிலிருந்து தண்ணீரை திருடுவதும் கண்டறியப்பட்டது.

மசூதி சொத்துக்களை சட்டவிரோதமாக அபகரித்தோ அல்லது அவற்றின் மின்சாரம் மற்றும் நீர் மீட்டர்களை உபயோகிக்கும் எவருக்கும் எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்றும் அது தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகவும் அமைச்சகம் எச்சரித்தது.

மசூதிகளின் சேவைகள் அல்லது சொத்துக்களில் ஏதேனும் மீறல்கள் இருந்தால், சீரான அறிக்கைகள் பெறுதல் மையம் (1933) அல்லது அதன் கிளைகளுக்கு நேரில் சென்று தொடர்புகொள்வதன் மூலம் குடிமக்களும் வெளிநாட்டவர்களும் அமைச்சகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!