ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் (RCRC) கிங் அப்துல் அஜிஸ் பொது போக்குவரத்து திட்டத்தின் கீழ் வரும் ரியாத் பேருந்து சேவையின் நான்காவது கட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்து, மார்ச் 2023 இல் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 6.31 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சுமார் 631,000 பயணங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
மொத்த போக்குவரத்து நெட்வொர்க்கில் 70% உள்ளடக்கிய இந்த 4 வது கட்டத்தின் தொடக்கமானது ரியாத் பேருந்து வழித்தடங்களின் மொத்த எண்ணிக்கை 40 ஐ எட்டியது. இதில் 614 பேருந்துகள் 1,632 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நிலையங்கள் மற்றும் நிறுத்தப் புள்ளிளில் சேவை செய்கின்றது.
இதில் மேலும் 7 புதிய வழித்தடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பாதை 932 அல்-ரபியின் அருகில் இருந்து அல்-யாஸ்மீன் நிலையத்தில் நிறுத்தத்துடன் தொடங்கி பாதை 933 அல்-நுஷா அருகில் இருந்து அல்-தாவுன் நிலையத்தில் நிறுத்தப்படும்.
பாதை 942 அல்-கலீஜ் மாவட்டத்தில் இருந்து தொடங்கும், அல்-ரவ்தா நிலையத்தில் நிறுத்தப்படும், பாதை 944 அல்-அண்டலஸ் நிலையத்திலிருந்து அல்-கலீஜ் நிலையத்திற்கும், பாதை 945 அல்-கலீஜ் மாவட்டத்தில் இருந்து அல்-நஹ்தா நிலையத்திற்கும் செல்லும்.
பாதை 947 அல்-ஷுஹாதா நிலையத்திலிருந்து அல்-முன்சியா நிலையத்திற்குத் தொடங்கும், மேலும் பாதை 948 யர்முக் சுற்றுப்புறத்திலிருந்து அல்-யர்மூக் நிலையத்தில் நிறுத்தப்படும்.
மேலும் டிக்கெட் விலைகள் 2 மணிநேரத்திற்கு சவூதி ரியால் 4, 3-நாள் டிக்கெட் விலை சவூதி ரியால் 20, 7 நாள் டிக்கெட் விலை சவூதி ரியால் 40 மற்றும் 30 நாள் டிக்கெட் விலை சவூதி ரியால் 140 என உள்ளது.
பஸ் கட்டணத்தை எளிதாகச் செலுத்த, கமிஷன் டார்ப் கார்டு சேவையை ரியாத் பேருந்து நிலையங்களில் அல்லது டிக்கெட் விற்பனை அலுவலகங்களில் டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் வாங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





