சவூதி தலைநகரில் அடக்கஸ்தலங்களை மேம்படுத்தும் திட்டத்தை ரியாத் முனிசிபாலிட்டி தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் அடக்கஸ்தலஙகளை பார்வையிடும் போது அடையாளங்களை எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் அடக்க இடங்களின் எண்ணிடுதல் போன்ற பல விஷயங்கள் செயற்படுத்த உள்ளன.
முதியோர் மற்றும் சிறப்புத் தேவை உள்ளவர்களுக்குப் போக்குவரத்து வசதி, இறுதிச் சடங்குகளின்போது துக்கம் அனுசரிப்பவர்களுக்கு குடைகள் தந்து வெப்பத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதும் அடங்கும். அடக்கத்தின் போது வழிகாட்ட இறந்தவரின் பெயரைக் காண்பிக்கும் மின்னணு திரைகளை இது வழங்குகிறது. மரம் வளர்ப்பை தீவிரப்படுத்தி, தாழ்வாரங்கள், வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் ஒழுங்குபடுத்தப்படும்.
143,000 சதுர மீற்றர் கொண்ட Oud மயானத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், திங்கட்கிழமை முதல் அடக்கம் செய்வதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை சுட்டிக்காட்டியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ரியாத் நகராட்சி கல்லறைகளை நிர்வகித்தல் மற்றும் இறந்தவர்களுக்கு மரியாதை செய்தல் போன்ற மேம்பாடுகளைச் செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.