சவூதி விண்வெளி ஆணையம், “சவுதி விண்வெளியை நோக்கி”என்ற கண்காட்சியை ரியாத், ஜித்தா மற்றும் தஹ்ரானில், மே 21 முதல் ஜூன் 2 வரை, சவூதியின் விண்வெளி பயணத்தின் தொடக்கத்துடன் இணைந்து நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த கண்காட்சிகள் விண்வெளியின் பரந்த துறையை ஆராயவும், விண்வெளி விமானங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்க முயல்கின்றன.
இந்த கண்காட்சிகள், விண்வெளி அறிவியல் மற்றும் இளைஞர்களிடையே அது தொடர்பான நிபுணத்துவங்களில் ஆர்வத்தின் அளவை உயர்த்துவதோடு இந்த துறையில் சவூதியின் ஆராய்ச்சி பங்களிப்புகள் மற்றும் அறிவியல் தாக்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.