சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) தலைவர் துர்கி அல்-ஷேக், ரியாத் சீசன் 2023க்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடங்கி, இந்த நோக்கத்திற்கான தனி இணையதளமான Webook.com, மூலம் பார்வையாளர்களுக்குப் பல நன்மைகள், சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்குவதாகவும், கண்காட்சியின் நான்காவது பதிப்பு ‘BIG TIME’ என்ற முழக்கத்துடன் கூடிய சீசன் அக்டோபர் 28ல் துவங்குகிறது என்று அறிவித்தார்.
நிகழ்வுகள், சலுகைகள் மற்றும் டிக்கெட்டுகள் உட்பட சீசன் தொடர்பான அனைத்தையும் இணையதளம் வழங்கும் என்றும் அக்டோபர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில், விண்ணப்பத்தில் இரண்டு சிறப்பு இசை நிகழ்ச்சிகள் இலவசமாக ஒளிபரப்பப்படும், ”என்றும் அல்-ஷேக் கூறினார்.
அல்-ஷேக் தனது X கணக்கில் இணையதளத்தில் பதிவுச் செய்பவர்களுக்கு ஒரு சொகுசு கார் பரிசுக்கான கேள்விகள் மற்றும் டிராக்களை உள்ளடக்கிய ஒரு போட்டி பற்றிப் பதிவிட்டு, சீசனுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்து வாங்குபவர்களிடம் இருந்து போட்டிக்குப் பெரும் வரவேற்புuy கிடைத்தது என்று கூறினார்.
தொடக்க விழாவின் முக்கிய சிறப்பம்சமாக மிகப்பெரிய நிகழ்வு மற்றும் மிகப்பெரிய ஹெவிவெயிட் குத்துச்சண்டை சண்டைகளில் ஒன்றான ரியாத் சீசன் பெல்ட் ஃபைட் நடைபெறவுள்ளது.
சீசனில் 60 சதவீத நிகழ்வுகள் புதிய அனுபவங்களாகவும், பிராண்டின் வரலாற்றைப் புதுப்பிக்கும் ‘பார்பி’ உலகம், ‘Boulevard Hall’ என்று அழைக்கப்படும் புதிய மண்டலம் ஆகியவை உள்ளன, இது 200,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரே நேரத்தில் 40,000 பார்வையாளர்களுக்கு மேல் தங்கும் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
ரியாத் சீசன் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நடவடிக்கைகளில் கலந்துகொள்ள உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் பல பார்வையாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது, மேலும் இந்த ஆண்டு சீசன் 10-12 மில்லியன் பார்வையாளர்களையும், சவூதிக்கு வெளியே இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளையும் இலக்காகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.