கடந்த செவ்வாயன்று ரியாத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தச் சிறப்பு மையத்தை நிறுவச் சவூதி அரேபியாவின் அமைச்சர்கள் குழு முடிவு எடுத்துள்ளது. நகரத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதோடு, பெரிய முதலீட்டுகளைக் கொண்ட சர்வதேச நிறுவனங்களின் இலக்காக மாறும் என மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 2021 இல் உலகின் 10 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக ரியாத்தை மாற்றுவதற்கான உத்தி தயாராகி வருவதாகப் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி மற்றும் ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன் (RCRC) தலைவரான முகமது பின் சல்மான் அறிவித்தார். சவூதி தலைநகரில் வணிகத்தின் தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், ரியாத் தற்போது கண்டுவரும் பெரிய வளர்ச்சிகளுக்கு ஏற்பப் பல்வேறு திட்டங்களின் பணிகளை ஒழுங்கமைக்க இந்த மையம் பங்களிக்கும் என ரியாத்தின் மேயர் இளவரசர் பைசல் பின் அய்யாஃப் கூறியுள்ளார்.
அமாகின் இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைவரும் பிரபல பொருளாதார நிபுணருமான கலீத் அல்-ஜாஸர், நாட்டின் திட்டங்களுடன் ரியாத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த மொழியப்பட்ட மையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சமீபத்தில் பல சர்வதேச நிறுவனங்களின் தலைமையகத்தை ரியாத்தில் திறக்கப்படுவதைக் கண்டதாக அல்-ஜாஸர் கூறினார்.
வணிகத் தலைவர்களுக்கிடையில் வருகைப் பரிமாற்றத்தைத் தொடர்வதன் மூலம் பல்வேறு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கு சவூதி அரேபியா உழைத்துள்ளதாக அல்-ஜாஸர் சுட்டிக்காட்டினார். அமைச்சர்கள் குழுவின் புதிய முடிவு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் முன்னுரிமைகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
வணிகத்தை ஒழுங்கமைப்பதற்கும் அதன் தரத்தை மேம்படுத்தவும் ஒரு ஒருங்கிணைந்த இயக்க மாதிரியை மையம் வழங்குகிறது மொனாசாட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரியல் எஸ்டேட் நிபுணர் கலீத் அல்-முபேயத் என்றார்.கணிப்புகள் சவூதியின் தலைநகரில் முக்கிய எதிர்கால திட்டங்களைச் சுட்டிக்காட்டுகின்றன, இது உலகின் மிகப்பெரிய நகர்ப்புற பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் என அல்-முபேயத்தின் கூறியுள்ளார்.