சவூதியின் தலைநகர் ரியாத்தில் 43 இடங்களில் நவீன வடிவமைப்புகளுடன் கூடிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரியாத் முழுவதும் 546 பூங்காக்கள் உருவாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள நகராட்சி ந்ரிவாகம், ரியாத்தின் குடியிருப்பு பகுதிகளுக்குள் பூங்காக்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது.