2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரியாத்தில் உள்ள தடயவியல் மருத்துவ சேவைகள் மையம் சுமார் 1030 இறந்த உடல்களை நாட்டிலிருந்து திருப்பி அனுப்பியதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் 3,317 இயற்கை மற்றும் குற்றவியல் மரணங்களை இந்த ஆண்டு முதல் பாதியில் மையம் கையாண்டுள்ளது.429 உடல்களை உள்ளூரில் அடக்கம் செய்ய மையம் ஒப்புதல் அளித்தது, டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிக்க 146 உடல்கள் ஒப்படைக்கப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடயவியல் மருத்துவ சேவை மையம் அமெரிக்க நோயியல் கல்லூரியின் அங்கீகாரச் சான்றிதழ், அங்கீகாரத்திற்கான சவுதி மையத்தின் அங்கீகாரச் சான்றிதழ், நிறுவன மற்றும் நிரல் அங்கீகாரச் சான்றிதழ் போன்ற பல்வேறு துறைகளில் அங்கீகாரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
தடயவியல் மருத்துவ சேவைகள் மையம் சிறந்த சேவைகளைச் சிறப்பான முறையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் ரியாத்தில் உள்ள சிறந்த மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.