ரியாத்தில் உள்ள பொது போக்குவரத்து இயக்குநரகம் (Maroor) கிங் ஃபஹத் சாலையில் லாரிகள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது என அறிவித்து, விதி மீறல் செய்பவர்களை கண்காணிப்பது தானாகவே நடத்தப்படும் என்றும், டிரக் ஓட்டுநர்கள் தீர்மானிக்கப்பட்ட சாலைகளைப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.
சவூதி தலைநகரின் வடக்கு மற்றும் தெற்கை ரியாத்தின் மையத்துடன் இணைக்கும் கிங் ஃபஹத் முக்கிய பிரதான சாலையானது ரியாத்தில் உள்ள போக்குவரத்து பகுதிக்கான முக்கிய வழிதடங்களில் ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.