சவூதி ரியல் எஸ்டேட் பொது ஆணையம் (REGA) சந்தையில் மோசடி மற்றும் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தரகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
குத்தகைதாரர்களை ஈர்க்கும்வகையில் வலைத்தளங்களில் வாடகை அலகுகளுக்கான விலைகளை மேற்கோள் காட்டி விளம்பரங்களை வெளியிட்டுப் பின்னர் அவர்கள் நேர வரம்பு மற்றும் பிற சாத்தியமற்ற கோரிக்கைகள் போன்ற பல்வேறு வழிகளில் அவருக்கு அழுத்தம் கொடுத்தும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
EJAR இயங்குதள வழிகாட்டுதல்களின்படி, சொத்தை உரிமையாளர் அல்லது உரிமம் பெற்ற ரியல் எஸ்டேட் தரகர் முன்னிலையில் சரிபார்க்க வேண்டும். மேலும் உரிமம் பெறாத ரியல் எஸ்டேட் முகவர்கள் அல்லது தரகர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமற்ற வாடகை சலுகைகளால் குத்தகைதாரர்கள் ஆசைப்பட வேண்டாம் என்றும் மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாடகை அலகுகளின் சராசரி விலைகளைக் கண்டறிய வாடகைக் குறியீட்டைப் பார்வையிட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
EJAR இயங்குதளம் தரப்படுத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களில் பரிவர்த்தனைகளின் செயல்திறனை அதிகரித்து மதிப்பு கூட்டப்பட்ட தீர்வுகளையும் வழங்கி, ரியல் எஸ்டேட் வாடகைத் துறையில் உள்ள சிக்கல்எளை குறைக்கிறது.மேலும் EJAR தொடங்கப்பட்டதிலிருந்து 6.5 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பு மற்றும் வணிக குத்தகை ஒப்பந்தங்களை ஆவணப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.