ரமலான் மாதத்திற்குப் பிறகும் ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு உம்ரா செய்ய அனுமதி பெறுவது கட்டாயம் என ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.
உம்ரா செய்ய விரும்பும் பயணிகள் நுசுக் அல்லது தவக்கல்னா ஆப் மூலம் அனுமதி பெற வேண்டும். உம்ரா பயணிகள் தங்கள் பயணத்தின்போது சவூதி நகரங்களைச் சுற்றியும் செல்லலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பயணிகள் ஹஜ் முன்பதிவுக்கான தவணையை செலுத்த ஷவ்வால் 10 ஆம் தேதியைக் கடைசி நாளாக அமைச்சகம் நிர்ணயித்துள்ளது .
குறிப்பிட்ட நேரத்தில் தவணைகளை முடிக்கும்போது இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படும் ,தவணைகளை முடிக்காதவர்களுக்கு முன்பதிவு ரத்து செய்யப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ அனுமதிகளை வழங்குவது மே 5 ஆம் தேதி, ஷவ்வால் 15 ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.