ரமழானின்போது 14 மில்லியனுக்கும் அதிகமான சரக்குகள் ஏற்றுமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகப் போக்குவரத்து பொது ஆணையம் (TGA) அறிவிப்பு.
கடந்த ஆண்டை விட ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்தில் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் 56% அதிகரித்துள்ளதாகவும், ஒருங்கிணைந்த அழைப்பு மையம்மூலம் 12,000 அழைப்புகளைப் பெற்றதோடு, 40,000 அறிக்கைகள் மற்றும் புகார்கள் கையாளப்பட்டதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், ஷிப்பிங் நிறுவனங்கள் ஷிப்பிங் தகவல்களின் ரகசியத்தன்மையைப் மீறப்படாமல் பாதுகாப்பதோடு பயனாளிகள் மற்றும் அவர்களின் விசாரணைகளுக்குப் பதிலளிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.