யான்பு நற்றமிழ்ச் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டம் யான்பு நகரில் தமிழால் இணைவோம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தது.
கடந்த மே 12 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சி மழலையரின் மாறுவேட அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள், ஓவியம் & கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என மிகச்சிறப்பாக நடைபெற்றது்.
கலந்து கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் இது ஒரு தமிழர்களின் கொண்டாட்டம் என மகிழும் வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடத்திக் காட்டியது மகிழ்ச்சியெனக் கூறினர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக யான்பு நற்றமிழ்ச் சங்கத்தின் தமிழ் நண்பர்கள் இணைந்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் 400 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.