Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மோசடி செய்பவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய சேவைகளுக்கு எதிராக Absher எச்சரிக்கை.

மோசடி செய்பவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய சேவைகளுக்கு எதிராக Absher எச்சரிக்கை.

178
0

உள்துறை அமைச்சகத்தின் online portal Absher தளமானது அதன் பயனாளிகளை மோசடி செய்பவர்களின் சூழ்ச்சிக்கு எதிராக எச்சரித்தது.

தனிநபர் விபரங்கள் மற்றும் வங்கியின் password வழங்குமாறு கேட்கும் email அல்லது message களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் அல்லது பணம் செலுத்த சந்தேகத்திற்குரிய இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயனாளிகளை எச்சரித்துள்ளது. மேலும் www.absher.sa என்ற இணையதளத்தின் மூலம் portal அதிகாரப்பூர்வ கணக்குகளை மட்டுமே கையாளவேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

Absher individual App மற்றும் Absher business App ஆகியவை Google Play, App Store மற்றும் AppGallery ஆகியவற்றின் மூலம் பதிவிரக்கம் செய்யலாம் என்றும், பயனரின் பெயர்கள், password மற்றும் OTP குறியீடுகளை எந்தவொரு நிறுவனத்துடனும் அல்லது நபருடனும் பகிரக் கூடாது என்றும், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், மோசடி செய்யப்படுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பற்ற இணையதளங்களுக்குள் சென்று உள்நுழையாமல் இருக்கவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் Absher தளம் வலியுறுத்தியுள்ளது என்றும் சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்ஷர் இயங்குதளமானது, “உங்களைச் சுரண்ட அனுமதிக்காதீர்கள்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், மோசடி செய்பவர்களுக்கு எதிராகப் பயனாளிகளை எச்சரிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!