Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மொராக்கோ மற்றும் துனிசியா பயணிகளின் வருகை நடைமுறைகளை எளிதாக்கும் பயணத்தைத் தொடங்கிய ஹஜ் மற்றும் உம்ரா...

மொராக்கோ மற்றும் துனிசியா பயணிகளின் வருகை நடைமுறைகளை எளிதாக்கும் பயணத்தைத் தொடங்கிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்.

132
0

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr. Tawfiq Al-Rabiah மொராக்கோ மற்றும் துனிசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடங்கி, இரு வட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சவுதி அரேபியாவிற்கு வரும் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் வருகை நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்த உள்ளார்.

டாக்டர் அல்-ரபியா NUSUK தளத்தின் கண்காட்சி மற்றும் விசா சேவைகள் மையத்தை (TASHEER) திறந்து வைக்க இருக்கிறார். இது விசா வழங்கும் நடைமுறைகளை எளிதாக்குவதோடு நடைமுறைகளை முடிக்கத் தேவையான நேரத்தைக் குறைக்கிறது.

பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அமைச்சரின் இந்த வருகை NUSUK தளம் மற்றும் அதன் சேவைகள் மூலம் உம்ரா அமைப்புகளை மேம்படுத்துவதற்கான முன்னோடி முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!