Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மே 4 ஞாயிறு முதல் 3 போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும் என போக்குவரத்து பொது இயக்குனரகம்...

மே 4 ஞாயிறு முதல் 3 போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும் என போக்குவரத்து பொது இயக்குனரகம் அறிவிப்பு.

196
0

3 போக்குவரத்து விதிமீறல்களின் தானியங்கி கண்காணிப்பை செயல்படுத்த இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது எனப் போக்குவரத்து பொது இயக்குனரகமான முரூர் உறுதி செய்துள்ளது.

பலவழிச் சாலையில் சரியான பாதையில் ஒட்டப்படாத லாரிகள் மற்றும் கனரக வாகனங்களைத் தானியங்கி கண்காணிப்பு கருவிகள் கண்காணிக்கத் தொடங்கும் என்றும் தானியங்கி கண்காணிப்பில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் இரவில் வாகனம் ஓட்டும் போது தேவையான விளக்குகளைப் பயன்படுத்தாமல் அல்லது வானிலை ஏற்ற இறக்கங்களின் வெளிச்சம் உறைவாகப் பயன்படுத்தும் வாகனஙகள் மேலும், வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படாத சாலைகளின் நடைபாதைகள் அல்லது பாதசாரி பாதைகளில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றை கருவிகள் கண்காணிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஏழு போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் தானியக்கமாக்குவது குறித்து பொதுப் பாதுகாப்பு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அல் பஸ்ஸாமி அவர்கள் முன்னதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தானியங்கி கண்காணிப்பில் சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும் அடங்கும் என்றும் தெளிவற்ற அல்லது சேதமடைந்த எண் தகடுகளுடன் வாகனங்களை ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் எடைகள் மற்றும் பரிமாணங்களை அளவிடும் நிலையத்தைப் புறக்கணித்தல் உள்ளிட்ட வாகனத்தை அதற்கென ஒதுக்கப்படாத இடங்களில் நிறுத்துதல் ஆகியவையும் பொதுப் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் சாலைப் பாதுகாப்புக்கான சிறப்புப் படையினர் இந்த விதிமீறல்களைக் கண்காணிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பின் அளவை உயர்த்துதல் மற்றும் சவூதி அரேபியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பொது சாலைகளில் விரும்பத் தகாத நடத்தைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் இது வரும் என்றும் போக்குவரத்து பொது இயக்குனரகம் எச்சரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!