2022 மே மாதத்துடன் ஒப்பிடும்போது சவூதி ரியால் 143 பில்லியனாக இருந்த சவூதி அரேபியாவின் சரக்கு ஏற்றுமதிகள் 2023ல் 32.1% அதாவது SR45.9 குறைந்து SR97.1 பில்லியனாக உள்ளது எனச் சவூதி அரேபியா புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) அறிவித்துள்ளது.
மேலும் மே 2022 இல் சவூதி ரியால் 115.5 பதிவு செய்யப்பட்ட பெட்ரோலிய ஏற்றுமதியின் மதிப்பு 2023 இல் 37.7% அதாவது SR43.5 பில்லியனாகக் குறைந்து பொருட்கள் ஏற்றுமதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எண்ணெய் அல்லாத ஏற்றுமதியின் மதிப்பு சவூதி ரியால் 27.5 பில்லியனாக இருந்து 8.7% அதாவது சவூதி ரியால் 2.4 பில்லியன் குறைந்து சவூதி ரியால் 25.1 பில்லியன் உள்ளது என GASTAT தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு SR56.0 பில்லியனாக இருந்த சவுதி அரேபியாவுக்கான சரக்கு இறக்குமதியின் மதிப்பு 2023 இல் 20.9% அதாவது SR11.7 பில்லியன் அதிகரித்து SR67.7 பில்லியனை எட்டியுள்ளது.
GASTAT சவூதி அரேபியாவில் புள்ளிவிவர தரவு மற்றும் தகவல்களுக்கான ஒரே அதிகாரப்பூர்வ அமைப்பாகும் இது புள்ளியல் துறையின் அனைத்து புள்ளிவிவரம் மற்றும் தொழில்நுட்பங்களை மேற்பார்வையிட்டு புள்ளிவிவர ஆய்வுகள், ஆராய்ச்சிகள் தரவு மற்றும் தகவலைப் பகுப்பாய்வு செய்து அதிலிருந்து தரவுகளைச் சரிபார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.