தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் மக்கா அல்-முகர்ரமா பகுதி, ஜித்தா – அல்-ஜமூம் – பஹ்ரா – ரபீக் – குலைஸ் – அல்-லைத் – அல்-குன்ஃபுதா ஆகிய இடங்களில் 23-11-2023 வியாழன் அன்று மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மேலும் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் குடிமைத் தற்காப்பு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் மக்களின் ஒத்துழைப்பே அரசின் குறிக்கோள் என்றும் மக்கள் பாதுகாப்பே எங்கள் இலக்கு என்றும் Civil defence அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.





