தைஃப் கவர்னரேட் முனிசிபாலிட்டியுடன் இணைந்து, வாழ்க்கைத் தரத் திட்டத்தின் ஆதரவுடன் கலாச்சார அமைச்சகத்தால்,தைஃப் நகரத்திற்கு இன்னும் சிறப்பையும் பொலிவையும் சேர்க்கும் நோக்கத்தோடு “தாயிஃப் ஆஃப் ரோஸஸ்” திருவிழாவை மூன்றாவது ஆண்டாக இந்த வருடமும் தொடங்கியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தைஃப் ரோஜாக்களின் கலாச்சாரத்துடன் கண்டறியவும், சவூதியின் நிலையான வளர்ச்சிக்கான பொருளாதார ஆதரவாளராக திருவிழாவை மாற்றவும் பல்வேறு நிகழ்வுகள் திருவிழாவையொட்டி நடத்தப்பட்டன.
பார்வையாளர்கள் அல்-காக்கி அரண்மனையின் நினைவுப் புகைப்படங்களை எடுத்தனர், அதன் நேர்த்தியான கட்டிடக்கலை கலைத்திறன், ஹிஜாஸ் வடிவமைப்பின் அடிப்படையில், ஜூனிபர் மரம், கிரானைட் கல் மற்றும் வண்ண கண்ணாடி ஆகியவற்றைப் பயன்படுத்தி, பண்டைய ரோமானிய பாணியுடன் கட்டப்பட்டுள்ளது.
சவூதி பிரஸ் ஏஜென்சி (SPA) ஹிஜ்ரி 1358 இல் கட்டப்பட்ட அல்-காக்கி அரண்மனையின் புகைப்படங்களை எடுத்தது, இதில் 40 அறைகள், பத்து குளியலறைகள் மற்றும் மூன்று தளங்களில் ஆறு சமையலறைகள், பழத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் , ரோஜாக்களால் சூழப்பட்ட பெரிய உட்புற முற்றங்கள், மற்றும் நன்னீர் கிணறுகளை கொண்டுள்ளது.
அல்-கடெப், ஜாப்ரா, அல்-சப்பான், அல்-காக்கி, அல்-புகாரி, அல்-தஹ்லாவி மற்றும் அல்-காமா போன்ற பல அரண்மனைகளுக்கு கவர்னரேட் பிரபலமானது, இவை அனைத்தும் வித்தியாசமான அழகியல் உணர்வை வெளிப்படுத்துகின்றன.