மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இஞ்சினியர் அஹமது அல் ராஜி அவர்கள் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில் சவூதி அரேபிய அன்னிய நேரடி முதலீட்டு வரத்து 22.5 பில்லியன் ரியால்களை எட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
தேசிய மாற்றத் திட்டத்தின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்று சவூதி அரேபிய அளவில் தனியார் துறையை மேம்படுத்துவது மேலும் சவூதியின் தொலைநோக்கு திட்டமான விஷன் 2030 ஐ அடைவதற்கான திட்டங்களில் இது ஒன்று என்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜிடிபி சிறு மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று கடந்த திங்கள் கிழமை ரியாத்தில் நடந்த எம்பர்டெக் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் கூறினார்.
அல்-ராஜி அவர்கள் தொலைநோக்குப் பார்வையின் அறிவிப்புக்குப் பிறகு சிறு மற்றும் வளர்ந்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றியுடன் முடிசூடியுள்ளன என்றும், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையை 1.1 மில்லியனுக்கும் அதிகமாகக் கொண்டு வரும் என்றும் அவர் கூறினார். தேசிய உருமாற்றத் திட்டம் சவூதி அரேபியாவில் தனியார் துறையை மேம்படுத்த 750 க்கும் மேற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களைச் சாதித்துள்ளது என்றும் “சவூதி அரேபியாவில் முதலீடு” முயற்சியில் குறிப்பிடத் தக்க முன்னேற்றங்களைப் பதிவுசெய்து, தொடர்புடைய உலகளாவிய குறிகாட்டிகளில் சவூதியின் தரவரிசையை உயர்த்துவதற்கான அதன் முன்முயற்சிகளைத் தொடங்கியது என்றும் சுமார் 80 சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பிராந்திய தலைமையகத்தைச் சவூதியில் திறப்பதற்கான உரிமங்களையும் பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.





