வடமேற்கு தபூக் பகுதியில் உள்ள துபா துறைமுகத்தில் சவுதி சுங்க அதிகாரிகள் 1,001,131 கேப்டகன் மாத்திரைகள், ஆம்பெடமைன் வகை ஊக்க மருந்துகளைக் கடத்தும் முயற்சியை முறியடித்துள்ளனர்.
துறைமுகம் வழியாக வந்த பாரவூர்தி ஒன்றில் சோதனை நடத்திய போது, முலாம்பழம் சரக்கு ஒன்றில் இருந்து இந்தப் பாரிய அளவிலான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, போதைப்பொருள் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகத் துறைமுகத்திற்கு வந்த போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டதாக ஜகாத், வரி மற்றும் சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதன் பின்னர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பெறுபவர்களைக் கைது செய்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.





