சவூதி அரேபியாவில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 2022 ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 இல் 2.8% ஆக அதிகரித்துள்ளது, இது ஏப்ரல் 2023 இல் மதிப்பிடப்பட்ட 2.7% அதிகரிப்பை விட அதிகமாகும் என்று புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) தெரிவித்துள்ளது.
வீடுகள், நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருட்களின் விலைகள் 8.4% மற்றும் உணவு மற்றும் பானங்கள் 0.9% அதிகரித்ததன் காரணமாக CPI இன் உயர்வு ஏற்பட்டது.
மே 2023 க்கு அதிகாரசபையால் வெளியிடப்பட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கை, சவுதி அரேபியாவில் வீட்டு வாடகைகள் 9.9%, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகையில் 23.7%,உணவு மற்றும் பானங்களின் விலைகள் 0.9%,இறைச்சி மற்றும் கோழி விலைகள் 2.4% ஆகவும், பால் மற்றும் முட்டை உள்ளிட்ட பால் பொருட்களின் விலைகள் 8.5% ஆகவும் உயர்ந்துள்ளது. போக்குவரத்தைப் பொறுத்தவரை, வாகனங்களின் விலை 1.2% அதிகரித்ததன் காரணமாக, இத்துறை 1.6% விலை உயர்வைப் பதிவு செய்தது.
GASTAT அறிக்கையானது, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் 5.0% அதிகரிப்பின் விளைவாகக் கேட்டரிங் சேவைகளின் விலைகள் 5.2% உயர்ந்துள்ளன, கல்விக் கட்டணங்கள் 4.5% உயர்ந்ததன் விளைவாக, கல்விப் பிரிவு 3.0% அதிகரித்தது, சுற்றுலாப் பயணங்களின் (விடுமுறைப் பொதிகள்) 14.1% விலை உயர்வு காரணமாக, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரத் துறை 3.8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தளபாடங்கள் வீட்டு உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு ஆகியவை விலை வீழ்ச்சியைக் கண்ட துறைகளில் 2.0% சரிந்தது, தரைவிரிப்புகள் மற்றும் பிற தரை உறைகளின் விலைகளில் 4.9% குறைந்ததால் பாதிக்கப்பட்டது.
ஆயத்த ஆடைகளின் விலை 3.3% குறைந்ததால், ஆடைகள் மற்றும் காலணிகளின் விலை 2.2% குறைந்துள்ளது, மேலும் மே 2023 இல் கல்வி மற்றும் புகையிலையின் விலைகள் எந்தக் குறிப்பிடத் தக்க மாற்றத்தையும் காணவில்லை என்று GASTAT வெளிப்படுத்தியது.