சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், FOX நியூஸ் சேனலின் (FNC) தலைமை அரசியல் தொகுப்பாளர் பிரட் பேயருக்கு பிரத்யேக நேர்காணல் அளிக்க உள்ளார்.
நேர்காணல் செப்டம்பர் 20 அன்று மாலை 6 மணி/ET (சவுதி அரேபியா நேரப்படி மறுநாள் காலை 1 மணிக்கு) ஒளிபரப்பப்படும். 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு இளவரசரின் முதல் பெரிய அமெரிக்க செய்தி நெட்வொர்க் நேர்காணல் இதுவாகும்.
எரிசக்தி அமைச்சர், விளையாட்டு அமைச்சர், சுற்றுலா அமைச்சர், பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் மற்றும் ட்ரையா கேட் மேம்பாட்டு ஆணையத்தின் CEO உள்ளிட்ட முக்கிய சவூதி அதிகாரிகளுடன் கூடுதல் நேர்காணல்களை இந்தச் செய்தி நிறவனம் நடத்த இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.