முகநூலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘எழுதுகிறேன் ஒரு கடிதம்’ போட்டி தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்த நவீன யுகத்தில் மறைந்து போன கடிதம் எழுதும் கலையை மீட்டெடுக்கும் விதமாகவும், வாசக எழுத்தாளர்களின் எழுத்தாற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் இப்போட்டியைத் தாங்கள் தொடர்ந்து நடத்துவதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஷேக்முஹமது, பெ. கருணாகரன், ஹ.பஃக்ருத்தீன், ஜியாவுத்தீன் முஹம்மது ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 77 ஆம் சுதந்திர நாளன்று தொடங்கிய இப்போட்டி ஒருமாதகாலத்திற்கு, செப்டம்பர் 15 வரை நீடிக்கிறது. முகநூலில் தமிழில் எழுதும் யாரும் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் ₹30,000 ரூபாய் மொத்தப் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.