KSA கடல் பின்மீன் ஊட்டச்சத்து மற்றும் நாவல் ஃபீட் ஃபார்முலேஷன் மன்றத்தை, கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (KAUST) சவூதி சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகத்துடன் (MEWA) இணைந்து, மே 17 மற்றும் 18 அன்று ரியாத்தில் நடத்தியள்ளது.
சவூதியில் கடல் மீன் வளர்ப்பை விரிவுபடுத்துவதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மன்றத்தில் கையெழுத்தானது. இது மீன்வளர்ப்பில் உலகளவில் முன்னிலையில் இருப்பதற்கான சவூதியின் லட்சியத்தையும், உணவுப் பாதுகாப்பில் சவூதியின் பசுமை முயற்சியியையும் ஆதரிக்கிறது.
மீன்வளர்ப்பு என்பது நீர்வாழ் உயிரினங்களை நுகர்வுக்காக வளர்ப்பதற்கான செயல்முறையாகும். 3,400 கிலோமீட்டர் அளவுக் கொண்ட , செங்கடல் மற்றும் அரேபிய வளைகுடா கடற்கரைகள் மீன்வளர்ப்பு துறையில் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.
மீன் வளர்ப்பு தீவனத்தை உருவாக்கி அதனை தயாரிப்பதை KAUST மற்றும் அரேபிய விவசாய சேவைகள் கோ. (ARASCO), நோக்கமாகக் கொண்டுள்ளது.
KAUST பீக்கன் டெவலப்மென்ட்டின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மார்க் ஹல், MEWA மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து பாசி மற்றும் மீன்வளர்ப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார்.
நாட்டின் நிலையான உணவுத் தேவைகளுக்கான தீர்வுகளை உருவாக்க MEWA மற்றும் KAUST ஆகியவை மீன்வளர்ப்பு மற்றும் பாசி வளர்ப்பு மூலம் உறுதிபூண்டுள்ளது. KAUST ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப பூங்காவில் ஒரு பைலட் அளவிலான திட்டத்தை பல்கலைக்கழகம் 2022 ஆம் ஆண்டில்
தொடங்கியது , இது 2030 ஆம் ஆண்டிற்குள் 530 ஆயிரம் டன் கடல் உணவுகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவதாக தேசிய கால்நடை மற்றும் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் CEO, டாக்டர். அலி அல்ஷெய்கி கூறியுள்ளார்.
வணிக மீன் வளர்ப்பு இனங்கள் பற்றிய ஐந்து வருட ஆராய்ச்சியை மன்றன் காட்சிப்படுத்தியது .
உணவுப் பாதுகாப்பைத் தீர்க்க வளங்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மீன்வளர்ப்பில் ஒரு நிலையான சாம்பியனாக KAUST இருந்து
வருகிறது. MEWA உடன் இணைந்து, KAUST ஆனது எதிர்காலத்தை மேம்படுத்தும் , தொழில்நுட்ப தீர்வுகளை ஊக்குவிக்கும்.