நீதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நாஜிஸ் (Najiz) தளம், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உரிமையை மாற்றுதல் மற்றும் சொத்துக்களை அகற்றுதல் உள்ளிட்ட ஆன்லைன் நீதித்துறை சேவைகளை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆன்லைன் சேவையின் மூலம் ரியல் எஸ்டேட் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்முறையைச் சில நிமிடங்களில் நிறைவேற்றி விடலாம்.
நாஜிஸ் தளமானது நீதிமன்றங்கள், சட்ட அமலாக்கம் மற்றும் நோட்டரைசேஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய 140க்கும் மேற்பட்ட நீதித்துறை இ-சேவைகளை வழங்குகிறது.மேலும் இதன் சொத்துப் பரிவர்த்தனை சேவையை ஐந்து நிமிடங்களுக்குள் முடிக்க முடியும், ஏனெனில் இது உலகின் வேகமான ஆன்லைன் சேவைகளில் ஒன்றாகும்.
மேலும் இந்த நாஜஸ் தளத்தைப் பயன்படுத்தும் செயல்முறையை இணையதளமாகத் தெரிந்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.