இரண்டு புனித மசூதிகள் விவகாரங்களின் தலைமையகம் இந்த ஆண்டு ஹஜ் பருவத்திற்கான செயல்பாட்டுத் திட்டத்தை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல்-ரபியா முன்னிலையில் பிரசிடன்சியின் தலைவர் டாக்டர் அப்துல்ரஹ்மான் பின் அப்துல்அஜிஸ் அல்-சுதைஸ் இந்த விரிவான செயல்பாட்டுத் திட்டத்தை அறிவித்தார்.
சவூதி விஷன் 2030 இன் அடிப்படையில் ஹஜ் 2023க்கான இலக்குகள் தொடர்பான பல முக்கிய குறிக்கோள்களில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. மேலும் அல்-சுதாயிஸ் அவர்கள் கூறும் போது “கொரோனா தொற்றுநோய் முடிந்து, ஹஜ் யாத்ரீகர்கள் திரும்புவதற்கான அறிவிப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு ஹஜ் பருவத்திற்கான செயல்பாட்டுத் திட்டம் வரலாற்றில் மிகப்பெரியது. புத்திசாலித்தனமான தலைமையால் தயாரிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த சேவை அமைப்பின் படி மில்லியன் கணக்கானவர்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர்.
மேலும் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் தலைமையிலான அரசாங்கத்தின் உத்தரவுகளின்படி அமைக்கப்பட்ட சிறந்த நோக்கங்கள் மற்றும் நீண்ட கால சாதனைகளின் விரிவாக்கமே இந்தத் திட்டம் என்றும் அவர் கூறினார்.
தன்னார்வ மற்றும் மனிதாபிமானப் பணிகளில், ஹஜ் பருவத்தில் இரண்டு புனித மசூதிகளில் பத்து துறைகளில் 8,000 க்கும் அதிகமான தன்னார்வ வாய்ப்புகளையும் 200,000 க்கும் மேற்பட்ட தன்னார்வ நேரத்தையும் இரண்டு புனித மசூதிகளின் காவலர்கள் அளித்ததாக அல்-சுதாயிஸ் கூறினார்.
இரண்டு புனித மசூதிகளின் வழிகாட்டும் பங்கை மேம்படுத்துவதற்காக, 49 நிலையங்களில் 51 சர்வதேச மொழிகளில் யாத்ரீகர்களுக்கான மொழிபெயர்ப்புச் சேவைகள், இடஞ்சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் தகவல்களை ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr. Tawfiq Al-Rabiah கூறுகையில், குறிப்பாக யாத்ரீகர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் திரும்பியதும், நாங்கள் சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் கிரிகைகளை இலகுவாக நிறைவேற்ற முடிகிறது என்று கூறினார்.