மருந்துச் சீட்டு இல்லாமல் narcotics பொருட்கள் கலந்துள்ள மருந்துகளை , சைக்கோட்ரோபிக் பொருட்களைக் கொண்ட மருந்துகளை விநியோகிக்கும் மருந்தாளுனர்களும் 5 ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையாக விதிக்கப்படும் என அரசு தரப்பு பொது வழக்குரைஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவில் தொழில் செய்ய உரிமம் பெற்ற மருத்துவர், கால்நடை மருத்துவர் அல்லது பல் மருத்துவரால் மருத்துவப் பரிந்துரை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சவூதி அரேபியா போதைப்பொருள் பரவலை எதிர்த்துப் போராடுகிறது, போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்து மற்றும் இளைய தலைமுறையினரை இதிலிருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.